Surprise Me!

ஹர்பஜன்சிங்கிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கங்குலி!- வீடியோ

2017-11-21 8,732 Dailymotion

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்கிடம் முன்னாள் கேப்டன் 'தாதா' கங்குலி ஒரு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். 'வங்கப்புலி' கங்குலி டிவிட்டரில் கணக்கு வைத்திருந்தாலும், சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட மாட்டார். அப்படியும், ஹர்பஜன்சிங் தனது மனைவி, குழந்தையுடன் எடுத்துக்கொண்ட ஒரு படத்தை டிவிட்டரில் ஷேர் செய்திருந்ததை கங்குலி கவனித்துவிட்டார். வெகு நாட்கள் உடன் விளையாடிய வீரர் ஹர்பஜன்சிங் என்பதால் டிவிட்டரில் கங்குலி படத்திற்கு ரிப்ளை செய்தார்.

பஜ்ஜி, உங்கள் மகன் ரொம்ப அழகாக இருக்கிறான். எனது அன்பை அவனுக்கு கொடுக்கவும் என்ற அர்த்தத்தில் ஹிந்தியில் கங்குலி டிவிட் செய்திருந்தார். ஆனால் அப்போதுதான் தனது தவறை கங்குலி உணர்ந்தார்.
ஹர்பஜன்சிங்கின் மகளைத்தான், மகன் என தப்பாக, குறிப்பிட்டதை உணர்ந்த கங்குலி, உடனடியாக மற்றொரு டிவிட் செய்தார். "பஜ்ஜி, மன்னித்துக்கொள்ளவும். உங்கள் மகள் அழகாக இருக்கிறார். எனக்கு வயதாகிறதல்லவா" என்று கும்பிடுவதை போன்ற எமோஜி போட்டு டிவிட் செய்திருந்தார் கங்குலி.

former Indian skipper Sourav Ganguly made an innocent gaffe after he commented on a picture shared by "The Turbanator" Harbhajan Singh on Twitter