Surprise Me!

அருவி இயக்குனரை விமர்சித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்- வீடியோ

2017-12-19 4 Dailymotion

அருவி இயக்குனர் அல்லது அவரின் குடும்பாத்தாருக்கு கள்ளக்காதல் இருக்கலாம் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நெட்டிசன் ஒருவர் அருவி விவகாரம் தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்த்து ட்வீட்டினார். அதை பார்த்த லட்சுமி, நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையில் கலந்து கொண்டீர்களா? கள்ளக்காதலா? அல்லது இயக்குனர் அல்லது அவரின் குடும்பாத்தாருக்கு இருக்கலாம். அதனால் தான் அவருக்கு ஷோ பற்றி அவ்வளவு தெரிந்துள்ளது என்று பதில் அளித்துள்ளார். அவர்கள் உயிருடன் இருக்கும் மக்கள், பெண்களை மதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது மத உணர்வுகளை எப்படி மதிப்பார்கள்? ஒரு பெண்ணை தாக்கி ஃபெமினிச படம் எடுத்துள்ளது அதிருப்தி அளிக்கிறது என்கிறார் லட்சுமி. தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குனருக்கு தைரியம் இருந்தால் என்னை நேருக்கு நேர் கேமரா முன்பு சந்தித்து என் கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும். படத்திற்கு பப்ளிசிட்டி தேட நல்ல வாய்ப்பு. ஜீதமிழ் உள்ளிட்ட எந்த பிரபல சேனல்களாவது இதை செய்ய தயாரா என்று லட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.



Actress Lakshmy Ramakrishan tweeted that, 'You have participated in #SU?Kallakaadhalaa?! Or , may be the director has or his family members:). That is why he knows so much about the show