Surprise Me!

சிறுமி ஹாசினி கொலை வழக்கு...தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பு- வீடியோ

2018-02-19 193 Dailymotion

தமிழகத்தை அதிர வைத்த சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்து குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த்.

மென்பொறியாளரான இவர் மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொன்று உடலை எரித்தார் தஷ்வந்த்.

சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.