Surprise Me!

சமையல் செய்யும் போராட்டம்

2018-05-02 148 Dailymotion

திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி காலை முதல் தொடர்ந்த போராட்டம்-அர்பன் பேங்க் முன்பு அதிகாரிகளை கண்டித்து திமுக சார்பில் சமையல் செய்யும் போராட்டம்.





திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு இன்று காலை முதல் வேட்ப்பு மனு பெறப்பட்டது.இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளும் கட்சிக்கு சாதகமாக ஆளும் கட்சியினரின் வேட்ப்பு மனுவை மட்டும் பெருவதாகவும் முறையாக தேர்தலை நடத்த கோரி கூட்டுறவு சங்கம் முன்பு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினர் க்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.தொடர்ந்து போராட்டக்காரர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதே போல குமரன் சாலையில் உள்ள அர்பன் வங்கியிலும் வேட்ப்பு மனு கொடுக்க வந்த திமுகவினரை உள்ளே விடாமல் அதிமுகவினரின் வேட்ப்பு மனுவை மட்டும் பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரிகளை கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து 11 பேரின் வேட்ப்பு மனுவை பெறாமல் தேர்தல் அதிகாரிகள் வங்கியின் பின்புறமாக வெளியில் சென்றதை தொடர்ந்து திமுகவினர் அர்பன் வங்கியின் முன்பு சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என்று கூறி வங்கியின் முன்பு அமர்ந்து இருப்பதால் ஏலமான போலீசார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

des : The Struggle for the Coalition Union elections in Thirupuram, the continuing struggle from the morning-the Aurban Bank denounced the authorities against the DMK.