Surprise Me!

பஞ்சாமிர்தம் டப்பாக்களின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு- வீடியோ

2019-03-25 228 Dailymotion


நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பழனி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் டப்பாக்களின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது.



17வது இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம்தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்தியமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக

பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம்மூலமாக தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது.



முருகன் கோவில் பஞ்சாமிர்தம் பிரசாதத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சொந்தமாக தயாரிக்கப்பட்டு பழனிகோவிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தயாரிக்கப்பட்டு வரும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



பக்தர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பஞ்சாமிர்த டப்பாக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

des: The Election Commission has been conducting awareness campaigns through the Panchamritham Thambas sold at Palani Murugan temple for a 100% vote in the parliamentary election.