Surprise Me!

7 வயது சிறுவனின் பிறந்தநாளை கொண்டாடி அசத்திய காவல்துறையினர்! #viral

2020-11-06 3 Dailymotion

பெற்றோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால், அவர்களது 7 வயது மகனின் பிறந்தநாளை காவல்துறையினர் கொண்டாடியுள்ளனர்.

மகாராஷ்டிராவின் தானே நகரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது 7 வயது மகனின் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போனதால், ட்விட்டரில் அதனை பதிவிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார். தானும், தனது மனைவியும், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்,
தங்கள் மகன் பாட்டி வீட்டில் இருப்பதாகவும் கூறியிருந்தார். தானே காவல்துறையை டேக் செய்திருந்த அவர், தனது மகனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், அவரை நேரில் சந்தித்து வாழ்த்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். #viral #hbd