Surprise Me!

மத்திய அரசின் மீத்தேன் திருவிளையாடல்..!

2020-11-06 0 Dailymotion

ஒரு சிறு குண்டூசி தயாரிப்பில் ஈடுபட்டாலே அதை மிகப்பெரிய வளர்ச்சி திட்டமாக விளம்பரம் செய்து தம்மட்டம் அடித்துகொள்ளும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மீத்தேன் திட்டம் குறித்த அறிவிப்பை அடக்கியே வாசித்தார்கள். இத்திட்டம் குறித்தும் இத்திட்டத்தால் நிகழப்போகும் பேராபத்துகள் குறித்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அபயக்குரல் எழுப்பிய பிறகு காவிரி டெல்டா மக்களுக்கு இத்திட்டம் குறித்து தெரிய வந்தது. இத்திட்டம் மிகவும் ஆபத்தானது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாகவே மாற்றிவிடும்.