நடிகை நிலானியை திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி லலித்குமார், சில நாள்களுக்கு முன்பு கே.கே.நகரில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய கருத்துகளால் மனம் உடைந்த நடிகை நிலானி, நேற்று கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில்,
திருவண்ணாமலையைச் சேர்ந்த காந்தி லலித்குமாரின் அண்ணன் ரகுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.