`ஏம்பா நம்ம கம்பெனில இந்த வருஷம் என்ன போனஸ்... காரா.. வீடா?'- இப்படி ஊழியர்கள் பேசிக் கொள்ளும் நிறுவனம் ஒன்றும் இந்தியாவில் இருக்கிறது. அத்தகைய கொடுத்து வைத்த ஊழியர்கள் சூரத்தில் உள்ளனர். ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் தன் ஊழியர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தப் பயன்படுத்துகிறார் இந்த நிறுவனத்தின் தலைவர் சவ்ஜி தோலாக்கியா.