Surprise Me!

உலகின் மிக உயர்ந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையான யாழ்ப்பாண தர்சினியின் கலியாணக் காட்சிகள்!!

2024-06-17 6,325 Dailymotion

உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீரர் தர்சினி சிவலிங்கம் 46 வது வயதில் திருமண பந்தத்தில் இன்று இணைந்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் புண்ணாலைக்கட்டுவன் பகுதியில் 1978 ம் ஆண்டு பிறந்தவர். இவர், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். 2009 ஆம் ஆண்டு முதல் இவர் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இணைந்து பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வந்தார். இலங்கை தேசிய வலைப்பந்து அணியிலிருந்து கடந்த வருடம் ஓய்வுபெற்றார். இருப்பினும் ஆஸ்திரேலியாவின் ஃபால்கன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடி வருகின்றார். இலங்கைக்காக அதிக வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டவர் எனும் புகழுக்குரிய தர்சினி, இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் பொறுப்பினையும் 2012ஆம் ஆண்டு வகித்திருந்தார்.

இவர் தென்னாபிரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் - இலங்கை சார்பாக விளையாடிய பின்னர், தனது ஒய்வை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந் நிலையில் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த தர்சினிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள்.