Surprise Me!

ஆள விடுங்க சாமிகளா.. கிணற்றில் விழுந்த மானை மீட்ட வனத்துறை... துள்ளி குதித்தோடிய புள்ளிமான்!

2025-07-13 16 Dailymotion

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு குடிசை சாலை தெருவில் அமைந்துள்ள கொல்லைமேடு விவசாய நிலங்களில் அவ்வப்போது முயல், பன்றி, மான், மயில் போன்ற வனவிலங்குகள் சுற்றித்திரிவது வழக்கம். இந்த நிலையில் இன்று புள்ளிமான் ஒன்று காட்டின் கால்வாய் வழியாக விவசாய நிலத்திற்கு வந்துள்ளது. அப்போது விவசாய நிலத்தில் அது மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென துள்ளி குதித்து விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது. 

புள்ளிமான் செய்வதறியாமல் முணங்கியபடி கிணற்றுக்குள் கிடந்துள்ளது. இதைப்பார்த்த விவசாயி ஒருவர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு மற்றும் வலை உதவியுடன் மீட்பு பணியை தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு புள்ளிமானை தீயணைப்புதுறையினர் உயிருடன் மீட்டனர். இதையடுத்து அந்த புள்ளிமான் துள்ளி குதித்து வனப்பகுதிக்குள் ஓடியது. இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.