கவர்மெண்ட் கொடுக்கும் முட்டை அப்படிதான் இருக்கிறது. சி.எம்.மிடம் புகார் கொடுத்து விடு எனவும் ரேஷனில் வழங்கப்படும் அரிசி, பருப்பிலும் புழு வர தான் செய்யும் அதை கம்ப்ளைன்ட் செய்வீயா, கவர்மெண்டில் இருந்து வரும் முட்டை கூமுட்டையாக இருந்தால் நான் பொறுப்பேற்க முடியாது. கூமுட்டை ஆக தான் வருகிறது. நான் கவர்மெண்ட் சர்வன்ட். நீ அங்கு போய் கம்ப்ளைன்ட் செய் என நான் சொல்ல முடியுமா? கொண்டைக்கடலை புழுவாக தான் இருந்தது. நாங்கள் சொல்லத்தான் செய்கிறோம். எங்களிடம் கையெழுத்து வாங்கி சென்று விடுகின்றனர் நாங்கள் என்ன செய்ய முடியும் எனவும் கேட்கிறார்.